/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எல்லையில் பாழடையும் புறக்காவல் நிலையம்
/
எல்லையில் பாழடையும் புறக்காவல் நிலையம்
ADDED : மார் 17, 2024 11:02 PM
ஆர்.கே.பேட்டை,: லோக்சபா தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடையும் நிலையில், ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய போலீஸ் புறக்காவல் நிலையம் பாழடைந்து கிடப்பது பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட பலிஜிகண்டிகை கிராமம் அமைந்துள்ளது.
இதில், பலிஜிகண்டிகையை ஒட்டிய தமிழக பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும், புதிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது.
பொதட்டூர்பேட்டை காவல்நிலைய போலீசார் இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சில மாதங்களுக்கு பின், அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இதனால், அந்த புறக்காவல் நிலையம் பாழடைந்தது. தற்போது, லோக்சபா தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைய துவங்கியுள்ள நிலையில், இந்த புறக்காவல் நிலையத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

