/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகளிடம் 'சில்மிஷம்' தந்தைக்கு 'காப்பு'
/
மகளிடம் 'சில்மிஷம்' தந்தைக்கு 'காப்பு'
ADDED : ஏப் 06, 2025 11:01 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில், இரண்டாவது மனைவி, அவரது 27 வயது மகளுடன் வசிப்பவர் 70 வயதுடைய நபர். மகள், வாய் பேசாத முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார்.
இந்நிலையில் மகளுக்கு, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உறவினர் பெண்ணிற்கு, தந்தையின் அத்துமீறல் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உறவினர் பெண், தந்தையிடம் வாக்குவாதம் செய்து, அந்த இளம்பெண்ணை மீட்டுச் சென்றார்.
மேலும், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகாரும் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தையை கைது செய்தனர்.