/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமிக்கு தொல்லை காவலாளிக்கு 'காப்பு'
/
சிறுமிக்கு தொல்லை காவலாளிக்கு 'காப்பு'
ADDED : மே 19, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகாவைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி, நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த குமார், 52, என்பவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார், குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விசாரணையில், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், குமார் காவலாளியாக வேலை செய்து வந்தார் என, தெரியவந்தது.