/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தோப்பாக மாறிய பள்ளி வளாகம் 10 ஆண்டுகளில் சாத்தியம்
/
தோப்பாக மாறிய பள்ளி வளாகம் 10 ஆண்டுகளில் சாத்தியம்
தோப்பாக மாறிய பள்ளி வளாகம் 10 ஆண்டுகளில் சாத்தியம்
தோப்பாக மாறிய பள்ளி வளாகம் 10 ஆண்டுகளில் சாத்தியம்
ADDED : ஜன 05, 2024 08:24 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்திரல், பேருந்து நிலையம் அருகே குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலை பள்ளி வளாகத்திற்கு கூடுதலாக வகுப்பறை கட்டடம், கடந்த 10 ஆண்டகளுக்கு முன் கட்டப்பட்டது.
ஊருக்கு மேற்கில், பஞ்சாட்சர மலையடிவாரத்தில் கட்டப்பட்ட இந்த வளாகம், கட்டுமான பணிகளுக்கு பின் பொட்டல் காடாக காணப்பட்டது. அதை தொடர்ந்து இந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. 10 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த பள்ளி வளாகம் தற்போது தோப்பு போல் காணப்படுகிறது.
மாணவர்களுக்கு பசுமையான சூழலை ஏற்படுத்தி உள்ளது. மரக்கன்றுகள் நடுவதால், சுற்றுச்சூழல் பாதுகாப்படும் என்பதுடன், கண்ணுக்கு விருந்தாக அமையும் என்பதையும் மாணவர்கள் கண் கூடாக பார்த்து உணர்ந்துள்ளனர். ஸ்ரீகாளிகாபுரத்தில், பல்வேறு அமைப்புகள் சார்பில், மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, சுற்றுப்பகுதியில் நடவு செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.