/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னநாகபூண்டி குளத்திற்கு உயரமான தடுப்பு அவசியம்
/
சின்னநாகபூண்டி குளத்திற்கு உயரமான தடுப்பு அவசியம்
ADDED : ஜன 08, 2025 12:45 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து, சோளிங்கர் வழியாக சித்துார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சின்னநாகபூண்டி கிராமம். இந்த கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மாநில நெடுஞ்சாலையையொட்டி அம்மன் கோவிலும், அதன் எதிரே குளமும் உள்ளன. நெடுஞ்சாலைக்கும், குளத்திற்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது.
இந்த வழியாக ஆந்திர மாநிலம், சித்துார், பலமனேர் மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சோளிங்கர் மற்றும் திருத்தணி கோவில்களுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர்.
மேலும், பெங்களூருவில் இருந்து தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும், மலர்களும் சென்னை கோயம்பேடு ச்நதைக்கு ஏற்றி வரப்படுகின்றன.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், நெடுஞ்சாலையை ஒட்டி உயரம் குறைவான தடுப்பு சுவருடன் அமைந்துள்ள குளத்தால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
நெடுஞ்சாசலையை ஒட்டிய நீர்நிலை கரைகளில் உலோக தடுப்புகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், சின்னநாகபூண்டி குளக்கரையிலும் உலோக தடுப்புகள் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.