/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க அலைமோதிய கூட்டம்
/
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க அலைமோதிய கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க அலைமோதிய கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க அலைமோதிய கூட்டம்
ADDED : டிச 24, 2024 12:18 AM

திருவள்ளூர்,திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர் கூட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று, திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனுக்களை அளிக்க மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.
வழக்கமாக மனுக்களை பதிவு செய்ய ஐந்து கவுன்டர்களுக்கு மேல் இயக்கப் பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே ஒரு கவுன்டர் மட்டும் இயக்கப்பட்டது.
1,000 பேர்
இதனால் மனுக்களை பதிவு செய்ய பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை பதிவு செய்தனர்.
பின், கூட்ட அரங்கில் மாவட்ட டி.ஆர்.ஓ., ராஜ்குமார் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்களை அளித்தனர். இதையடுத்து ஆண், பெண், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்குஉள்ளாகினர்.
பின் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது.
நெமிலிச்சேரியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது, அரண்வாயல் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு உட்பட மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
இதையடுத்து, அலுவலக நுழைவாயிலேயே காவல்துறையினர் மடக்கினர்.
பின் மனு அளிக்க வருபவர்களில் முக்கியமான நபர்கள் மட்டும் உள்ளே சென்று மனு அளிக்க வேண்டும் என அறிவுறுத்ததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் நுழைவாயில் அடைக்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
பின், நுழைவாயில் திறக்கப்பட்ட நிலையில் மடை திறந்த வெள்ளம் போல கேட்டை தள்ளிவிட்டு அவசர அவசரமாக பொதுமக்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவள்ளூர் நகர காவல் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்.
நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக 134, சமூக பாதுகாப்பு திட்டம் 88 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், வேலைவாய்ப்பு வேண்டி 39, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 95, இதர துறை 67 என, மொத்தம் 423 மனுக்கள் பெறப்பட்டன என, மாவட்ட நிர்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.