/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட மனிதாபிமான எஸ்.ஐ.,
/
மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட மனிதாபிமான எஸ்.ஐ.,
ADDED : செப் 23, 2024 12:32 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அடுத்த ஜி.பி.ஆர்., கண்டிகையை சேர்ந்தவர் வரதய்யா, 54.
விவசாய பணி மேற்கொண்டு வந்த இவருக்கு திருமணமாகவில்லை. உறவினர்கள் கவனிப்பில்லாததால் கடந்த 15 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட இவர் நிர்வாணமாக அப்பகுதி முழுதும் சுற்றி வந்தார்.
இதனால் இவரைக் கண்ட அப்பகுதிவாசிகள் பயத்துடன் இருந்தனர். அவரை மனநல காப்பகத்தில் சேர்க்க அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த இளங்கோவன் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அவரை மீட்டு, ஆடை அணிவித்து திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். ஒரு மாதமாக சிசிக்சை பெற்று வந்த வரதய்யா குணமடைந்து வருகிறார்.
காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வரதய்யாவை அடிக்கடி வந்து பார்வையிட்டு, பழங்கள், பிரட் பிஸ்கட் கொடுத்து கவனித்து வருகிறார்.
தற்போது திருவலங்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் இளங்கோவன் கூறும்போது, ''வரதய்யா 70 சதவீதம் குணடைந்து உள்ளார். இன்னும் ஒரு சில மாதங்கள் சிகிச்சை பெற வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரை முதியோர் காப்பகத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.