/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூட்டி கிடக்கும் அரசு பள்ளி கழிப்பறை
/
பூட்டி கிடக்கும் அரசு பள்ளி கழிப்பறை
ADDED : அக் 13, 2024 01:24 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ- --மாணவியர் படித்து வருகின்றனர். மாணவ- -மாணவியர் நலன்கருதி ஊராட்சி நிர்வாகம் பள்ளி அருகே தனித்தனி கழிப்பறை கட்டடம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக கழிப்பறைகளை ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், கழிப்பறை கட்டடம் சுற்றியும் செடிகள் மற்றும் முட்செடிகளும் வளர்ந்துள்ளன
ஆனால் ஊராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு செலவு என குறிப்பிட்ட தொகை ஊராட்சி நிதியில் இருந்து செலவு செய்கின்றனர். ஆனால் மாணவர்கள் கழிப்பறைக்கு, செல்வதற்கு வழியில்லாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் மாணவர்கள் திறந்து வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்கின்றனர்.