/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
/
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
ADDED : பிப் 19, 2025 08:33 PM
திருத்தணி:திருத்தணி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 42. இவர், திருத்தணி இரண்டாவது ரயில்வேகேட், கந்தசாமி தெருவில் மளிகை கடை வைத்துள்ளார்.
கடந்தாண்டு டிச.1ம் தேதி, மதியம் கடையில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்த டில்லிபாபுவை, திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெரு சேர்ந்த முகமது யூசப் அலி, 20, முன்விரோதம் காரணமாக, நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து கத்தியால் கை மற்றும் தலைப்பகுதியில் பட்டப்பகலில் வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து டில்லிபாபு அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்றே யூசப் அலி, அவரது இரண்டு நண்பர்களை கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஆறுமுகசாமி கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 22, என்பவரை, நேற்று, போலீசார் கைது செய்தனர்.

