/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உவர்ப்பு மண்ணில் அலையாத்தி காடுகள் உருவாக்கம் புது முயற்சி! 500 ஏக்கரில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
/
உவர்ப்பு மண்ணில் அலையாத்தி காடுகள் உருவாக்கம் புது முயற்சி! 500 ஏக்கரில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
உவர்ப்பு மண்ணில் அலையாத்தி காடுகள் உருவாக்கம் புது முயற்சி! 500 ஏக்கரில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
உவர்ப்பு மண்ணில் அலையாத்தி காடுகள் உருவாக்கம் புது முயற்சி! 500 ஏக்கரில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
UPDATED : ஜன 17, 2024 07:45 AM
ADDED : ஜன 16, 2024 11:47 PM

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம் பகுதிகளில், பல்வேறு தொழில் நிறுவனங்களின் வருகையால், அங்குள்ள அலையாத்தி காடுகள் பாதிப்படைந்தன.
'மிஷ்டி' திட்டம்
வளர்ச்சி திட்டங்களுக்காக புதிய தொழில் நிறுவனங்களின் வருகையை தவிர்க்க முடியாத சூழலில், அலையாத்தி மற்றும் பிற காடுகளை அதிகளவில் உருவாக்க மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல் திட்டம் உருவாக்கி உள்ளது.கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்பு நில முன்னெடுப்பு எனப்படும் 'மிஷ்டி' திட்டத்தின் கீழ் இது உருவாகிறது.
இந்த திட்டத்தின் நோக்கமானது, கடற்கரை ஓரங்களில் சதுப்பு நில காடுகளை அதிகளவில் உருவாக்குவது மற்றும் அவற்றை பாதுகாப்பதாகும்.
10 வகை மரக்கன்றுகள்
அதன்படி, தற்போது காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பகிங்ஹாம் கால்வாயின் இருபுறமும் உள்ள கரைகள் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சமன் செய்யப்பட்டன.அதிலிருந்த முட்செடிகள் முற்றிலும் அகற்றப்பட்டன.
தற்போது, பகிங்ஹாம் கால்வாயின் ஓரங்களில் அலையாத்தி செடிகளும், அதற்கு அடுத்துள்ள சதுப்பு நிலப்பகுதிகளில், உவர்ப்பு மண்ணில் வளரக்கூடிய புன்னை, பூவரசு, அத்தி, ஆலம், அரசு என, 10 வகையான மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீர் டிராக்டர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பாய்ச்சப்படுகிறது.
மேலும், மழைநீரை சேமித்து, பயன்படுத்துவதற்காக ஆங்காங்கே கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில், 500 ஏக்கர் பரப்பில், 3.50 லட்சம் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க வனத்துறை திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் பள்ளங்கள் தோண்டுவது, அதில் செடிகளை பதிப்பது, தினமும் அவற்றிற்கு வெளியில் இருந்து டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவது என, திட்டப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

