/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரண்டு இடங்களில் புதிய வணிக வளாகம் ரூ.1.30 கோடியில் பொன்னேரியில் அமைகிறது
/
இரண்டு இடங்களில் புதிய வணிக வளாகம் ரூ.1.30 கோடியில் பொன்னேரியில் அமைகிறது
இரண்டு இடங்களில் புதிய வணிக வளாகம் ரூ.1.30 கோடியில் பொன்னேரியில் அமைகிறது
இரண்டு இடங்களில் புதிய வணிக வளாகம் ரூ.1.30 கோடியில் பொன்னேரியில் அமைகிறது
ADDED : அக் 04, 2024 02:38 AM
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு சொந்தமாக பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில், 54 கடைகளுடன் வணிக வளாகங்கள் செயல்படுகின்றன. இவற்றின் வாடகை வாயிலாக, ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில், பழைய பேருந்து நிலைய வளாகத்தில் இருக்கும், 16 கடைகள் கொண்ட வணிக வளாக கட்டடம் பழுதடைந்தது. கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மழைக்காலங்களில் கடைகளில் மழைநீர் கசிவு ஏற்படுகிறது. கட்டடம் பலவீனமாகி வருவது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிய வந்தது.
மேலும், இதன் அருகில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக, கழிவுநீர் சேகரிப்பு கீழ்நிலை தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், கட்டடம் மேலும் பலவீனம் அடையும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், தற்போது அவற்றை இடிக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதேபோல, புதிய பேருந்து நிலைய வளாகத்தில், காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக ஒரு வணிக வளாகம் அமைத்து, அதன் வாயிலாக கூடுதல் வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த இரு பணிகளுக்காக, பொன்னேரி நகராட்சியில் ஆறாவது மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ், 1.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில், விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.