/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரம் ஏரியின் கரைகளில் அமையும் அலை தடுப்புச்சுவர் மண் அரிப்பை தடுக்க புதிய முயற்சி
/
சோழவரம் ஏரியின் கரைகளில் அமையும் அலை தடுப்புச்சுவர் மண் அரிப்பை தடுக்க புதிய முயற்சி
சோழவரம் ஏரியின் கரைகளில் அமையும் அலை தடுப்புச்சுவர் மண் அரிப்பை தடுக்க புதிய முயற்சி
சோழவரம் ஏரியின் கரைகளில் அமையும் அலை தடுப்புச்சுவர் மண் அரிப்பை தடுக்க புதிய முயற்சி
ADDED : மே 31, 2025 11:29 PM

சோழவரம்,சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது.
கரைகள் அடிக்கடி சேதமடைந்து, மண் சரிவும் ஏற்படுவதை தொடர்ந்து, மத்திய - மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நீரியல் வல்லுனர்களின் பரிந்துரையின்படி, சோழவரம் ஏரி சீரமைப்பு பணிகளுக்கு, தமிழக அரசு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
மொத்தம், 3.5 கி.மீ., நீளம் கொண்ட ஏரியின் கரையில், அதிக பாதிப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, 1.04 கி.மீ., தொலைவிற்கு கரை சீரமைப்பு பணி கடந்தாண்டு துவங்கப்பட்டது.
கரைகளின் உள்பகுதியில், 6 மீ., உயரத்தில் கான்கிரீட் சுவர், சரிவுகளில், 30 மீட்டர் உயரத்திற்கு பாறை கற்கள் பதிப்பது, கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்களில், நவீன தொழில்நுட்பமான 'டி - வால்' எனப்படும் நீர்க்கசிவு தடுப்புச்சுவர் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, கரையின் மேல்பகுதியில், 1 மீ., உயரத்தில் அலை தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. இச்சுவரின் மேல் பகுதி சிறிது வளைவாக அமைக்கப்பட்டு உள்ளது. இது அலையை உள்வாங்கி திருப்பி அனுப்பும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது. அலை தடுப்பு சுவருக்கான கட்டுமான பணிகளில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
நீர்வளத்துறையினர் கூறியதாவது:
கடந்த 2023ல் சோழவரம் ஏரியின் குறிப்பிட்ட பகுதியில், கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் சீரமைப்பு பணி நடக்கிறது. சோழவரம் ஏரியில் அலைகள் அதிகமாக இருக்கும்.
அலைகள் கரையில் மோதும் போது, மண் அரிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், புதிய முயற்சியாக அலை தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.