/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுமை துாக்கும் தொழிலாளர்கள் நாமம் போட்டு நூதன போராட்டம்
/
சுமை துாக்கும் தொழிலாளர்கள் நாமம் போட்டு நூதன போராட்டம்
சுமை துாக்கும் தொழிலாளர்கள் நாமம் போட்டு நூதன போராட்டம்
சுமை துாக்கும் தொழிலாளர்கள் நாமம் போட்டு நூதன போராட்டம்
ADDED : மார் 24, 2025 02:49 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் உள்ள மேல்திருத்தணி பகுதியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று நுகர்பொருள் வாணிப கிடங்கு நுழைவாயிலில் சுமை துாக்கும் தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெற்றி மற்றும் உடலில் நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சங்க மாநில தலைவர் வீரராகவன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று, 10 ஆண்டுகள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்க அங்கீகாரம் தேர்தல் நடத்த வேண்டும் என. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 2015ம் ஆண்டு முதல், 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். பணி செய்யும் போது சுமை துாக்கும் தொழிலாளர்கள் இறந்தால், 7 லட்சம் ரூபாயில் இருந்து, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை, 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொழிலாளர்கள் கண்டன கோஷம் எழுப்பியும், தட்டு வைத்து பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.