sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கும்மிடியில் இருந்து பிரிந்து புதிதாக உதயமாகிறது...மாதர்பாக்கம் ஒன்றியம்:அரசின் ஒப்புதலுக்காக கருத்துரு அனுப்பி வைப்பு

/

கும்மிடியில் இருந்து பிரிந்து புதிதாக உதயமாகிறது...மாதர்பாக்கம் ஒன்றியம்:அரசின் ஒப்புதலுக்காக கருத்துரு அனுப்பி வைப்பு

கும்மிடியில் இருந்து பிரிந்து புதிதாக உதயமாகிறது...மாதர்பாக்கம் ஒன்றியம்:அரசின் ஒப்புதலுக்காக கருத்துரு அனுப்பி வைப்பு

கும்மிடியில் இருந்து பிரிந்து புதிதாக உதயமாகிறது...மாதர்பாக்கம் ஒன்றியம்:அரசின் ஒப்புதலுக்காக கருத்துரு அனுப்பி வைப்பு


ADDED : மார் 05, 2025 02:20 AM

Google News

ADDED : மார் 05, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, புதிதாக மாதர்பாக்கம் ஒன்றியம் ஏற்படுத்துவதற்கான திட்டம், அரசின் ஒப்புதலுக்காக கருத்துரு அனுப்பப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பட்டியலில், விரைவில் மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, புழல், சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பூண்டி, எல்லாபுரம் உட்பட, 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், குறைந்தபட்சமாக, புழல் ஒன்றியத்தில் ஏழு ஊராட்சிகளும், அதிகபட்சமாக, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளும் உள்ளன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் ஏற்படுத்தும் பணிகளை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 60 ஊராட்சிகளுக்கு மேல் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரித்து, புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 61 ஊராட்சிகள் கொண்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம், திட்ட வரைவு கேட்டு இருந்தது.

இதுகுறித்து திட்ட வரைவு தயாரித்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஒன்றிய நிர்வாகம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இருந்து, 22 ஊராட்சிகளை பிரித்து, புதிதாக மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்தி முதல்கட்ட ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

புதுகும்மிடிப்பூண்டி மற்றும் பெத்திக்குப்பம் ஊராட்சிகள், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்கப்பட இருப்பதால், அந்த இரு ஊராட்சிகளை தவிர, 37 ஊராட்சிகள் கொண்ட கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக வரவிருக்கும் செங்குன்றம் நகராட்சியுடன், புழல் ஊராட்சி ஒன்றியம் இணைக்கப்பட உள்ளது. புழல் ஊராட்சி ஒன்றியத்தை இணைக்கும் பட்சத்தில், அந்த ஒன்றிய அலுவலக பணியாளர்கள், புதிதாக ஏற்படுத்தவுள்ள மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி மற்றும் மாதர்பாக்கம் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களின் கீழ், ஊராட்சிகள் பிரித்து கலெக்டரின் ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்த பின், இரு ஒன்றியங்களில் இடம்பெறும் ஊராட்சிகளின் பட்டியல் இறுதி செய்யப்படும்.

ஊராட்சி ஒன்றிய அலுவலர்,

கும்மிடிப்பூண்டி.

மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்


1. பூதுார்2. செதில்பாக்கம்3. ஈகுவார்பாளையம்4. எருக்குவாய்5. கண்ணம்பாக்கம்6. கண்ணன்கோட்டை7. கரடிபுத்துார்8. கொள்ளானுார்9. மாநெல்லுார்10. மாதர்பாக்கம்11. முக்கரம்பாக்கம்12. நெல்வாய்13. நேமளூர்14. பாதிரிவேடு15. பல்லவாடா16. பெரியபுலியூர்17. போந்தவாக்கம்18. பூவலம்பேடு19. சாணபுத்துார்20. சிறுவாடா21. சூரப்பூண்டி22. தேர்வாய்








      Dinamalar
      Follow us