/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த ஸ்கூட்டருக்கு மாற்றாக புதிய வாகனம்
/
பழுதடைந்த ஸ்கூட்டருக்கு மாற்றாக புதிய வாகனம்
ADDED : நவ 13, 2024 08:26 PM
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகளுக்கு முன் பெற்று, பழுதடைந்த ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக புதிய வாகனம் வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த வாகனங்கள் பழுதடைந்திருந்தால், அதற்கு பதிலாக மீண்டும் புதிய வாகனம் பெற மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தில், புதிய வாகனம் பெற விருப்பமுள்ளோர், மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டு நகல் மற்றும் ஏற்கனவே பெற்ற வாகனத்தின் ஆர்.சி., புத்தக நகல் மற்றும் இரண்டு புகைப்படத்துடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வரும் 22க்குள் சமர்ப்பிக்கவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

