/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத பூங்கா கழிப்பறை
/
கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத பூங்கா கழிப்பறை
கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத பூங்கா கழிப்பறை
கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத பூங்கா கழிப்பறை
ADDED : ஜன 27, 2025 02:08 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்டது என்.ஜி.ஓ., காலனி. இங்கு, 10 ஏக்கர் பரப்பில், பெரிய அளவிலான பூங்கா ஏற்படுத்தப்பட்டது. அந்த பூங்காவில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மரங்கள், நடைபயிற்சியாளருக்கு நீண்ட நடைபாதை, இருக்கை, கழிப்பறை, சிறுவர் விளையாடும் இடம் என, பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த, 10 ஆண்டுக்கும் மேலாக இந்த பூங்காவினை நகராட்சி நிர்வாகம், தனியாக பராமரிப்பாளரை நியமித்து, பராமரித்து வருகிறது. இந்நிலையில் பூங்காவிற்கு வரும் நடைபயிற்சியாளர் மற்றும் பொதுமக்களுக்காக, இங்கு, ஒராண்டிற்கு முன் கழிப்பறை கட்டப்பட்டது.
தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் இருந்து கட்டப்பட்ட இந்த கழிப்பறை இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல், பூட்டியே கிடக்கிறது. இதனால், பூங்காவிற்கு வரும் வயதானோர், சிறுவர் மற்றும் பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, பூங்காவில் கட்டப்பட்ட கழிப்பறையை திறந்து, முறையாக பராமரிக்க, நகராட்சி நிர்வாகத்திற்கு பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

