/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரக்கோணத்தில் ரயில் தண்டவாளம் 'கட்' கூச்சலிட்டு ரயிலை நிறுத்திய பயணியர்

ADDED : அக் 04, 2024 02:35 AM

அரக்கோணம்:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து, நேற்று காலை சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே, காலை 8:40 மணியளவில் வந்தபோது, தண்டவாளத்தில் திடீரென சத்தம் கேட்டது.
ரயிலில் இருந்த பயணியர் கூச்சலிட்டதை அடுத்து, எஸ்., 1 பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உடைந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், 40 நிமிட போராட்டத்திற்கு பின், 9:20 மணிக்கு தற்காலிகமாக சீரமைத்தனர்.
அதன்பின், திருவனந்தபுரம் -- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், அவ்வழியாக சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட ரயில்கள் 40 நிமிடங்கள் தாமதமாக சென்றன. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தண்டவாளத்தை ஊழியர்கள் உரிய முறையில் பராமரிக்காதது மற்றும் அதிகாரிகள் பார்வையிடாததே, தண்டவாளம் விரிசல் அடைந்ததற்கு காரணம் என, பயணியர் குற்றஞ்சாட்டினர்.