/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்கிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
/
பைக்கிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
பைக்கிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
பைக்கிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
ADDED : செப் 30, 2024 05:27 AM
ஊத்துக்கோட்டை : வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல், காந்தி நகரில் வசித்து வந்தவர் பிரசாந்த், 33. தனியார் நிறுவனத்தில் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணியாற்றி வந்தார். கடந்த மாதம், 11ம் தேதி தன் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், திருவள்ளூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். பூச்சிஅத்திப்பேடு பகுதியில் வந்தபோது, திடீரென நாய் குறுக்கே வந்தது.
அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.