/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடி மையமாக மாறிய விளையாட்டு திடல்
/
குடி மையமாக மாறிய விளையாட்டு திடல்
ADDED : ஏப் 09, 2025 02:40 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட காக்களூர் மற்றும் காக்களூர் காலனி உள்ளிட்ட பகுதிகள். கிராமத்தின் தெற்கில் ஜங்காலிபள்ளி செல்லும் பகுதியில் ஊரக விளையாட்டு திடல் அமைந்துள்ளது.
இந்த திடலுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. திடலில் சோலார் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பராமரிக்காததால், திடலில் உள்ள விளையாட்டு சாதனங்கள் துரு பிடித்து உடைந்து கிடக்கின்றன.
விளையாட்டு திடலில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் இங்குள்ள சோலார் மின்விளக்கு வெளிச்சத்தில், குடிமகன்கள் இங்கு மது அருந்துகின்றனர்.
இதனால், விளையாட்டு திடல் முழுதும் பிளாஸ்டிக் குப்பையும், காலி மதுபாட்டில்களும் சிதறிக்கிடக்கின்றன. மதுபிரியர்களை கட்டுப்படுத்தும் விதமாக விளையாட்டு திடலுக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

