/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையின் நடுவே மின்கம்பம்; நெடுஞ்சாலையில் 'ஒட்டு' போடும் பணி பொன்னேரியில் வாகன ஓட்டிகள் அதிருப்தி
/
சாலையின் நடுவே மின்கம்பம்; நெடுஞ்சாலையில் 'ஒட்டு' போடும் பணி பொன்னேரியில் வாகன ஓட்டிகள் அதிருப்தி
சாலையின் நடுவே மின்கம்பம்; நெடுஞ்சாலையில் 'ஒட்டு' போடும் பணி பொன்னேரியில் வாகன ஓட்டிகள் அதிருப்தி
சாலையின் நடுவே மின்கம்பம்; நெடுஞ்சாலையில் 'ஒட்டு' போடும் பணி பொன்னேரியில் வாகன ஓட்டிகள் அதிருப்தி
ADDED : மார் 22, 2024 08:44 PM

பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் இடையேயான, 11 கி.மீ., மாநில நெடுஞ்சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக, கடந்த, 2018ல், 45 கோடி ரூபாயில், 16 மீ., அகலத்தில் இருவழிச்சாலையாகவிரிவுபடுத்தப்பட்டது.
தொடர் வாகன போக்குவரத்து மற்றும் அதிக சுமையுடன் செல்லும் வாகனங்களால் இந்த சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்று இருந்தது.
மீடியனை ஒட்டியுள்ள சாலைப்பகுதிகள், அதிக சுமைகளுடன் செல்லும் கனரக வாகனங்களால் உள்வாங்கியது. சாலையில் ஒருபுறம் பள்ளம், மறுபுறம் மேடு என இருந்ததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்தனர்.
மேற்கண்ட சாலை அமைத்த ஒப்பந்த நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். அந்நிறுவனம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியது. நெடுஞ்சாலைத் துறையினரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மூன்று ஆண்டுகளாக மேற்கண்ட சாலையில் எந்தவொரு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, தற்போது பொன்னேரி - மீஞ்சூர் சாலையில் 'ஒட்டு' போடும் பணியில் நெடுஞ்சாலைத்துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. கண்துடைப்பிற்காக பள்ளங்களில் தார் போட்டு சீரமைக்கப்படுகிறது. இரண்டு நாட்களில் அவை பெயர்ந்து, சரளை கற்கள் சாலை முழுதும் பரவுகிறது.
ஏற்கனவே பள்ளம் மேடுகளில் சிரமத்துடன் பயணித்து வந்த வாகன ஓட்டிகள் தற்போது, நெடுஞ்சாலைத்துறையின் 'பேட்ச்ஒர்க்' பணிகளால் மேலும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தேர்தல் அவசர கதியில், ஓட்டுக்காக நடைபெறும் அரைகுறை பேட்ச்ஒர்க் பணிகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
பள்ளம் மேடு உள்ள பகுதிகள், சேதம் அடைந்த இடங்களில் சாலையை முழுமையாக அகற்றி நேர்த்தியாக அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஊத்துக்கோட்டை --- திருவள்ளூர் மார்க்கத்தில் ஒதப்பை கிராமத்தில், ஏற்கனவே இருந்த தரை பாலத்தின் இடதுபுறம் 2019ம் ஆண்டு ரூ.12.10 கோடி மதிப்பில் ஒரு உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கி, 2023ம் ஆண்டு முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. பாலம், 204 மீட்டர் நீளத்தில், 8.00 மீட்டர் அகலம், பாதசாரிகள் நடக்க, 1.5 மீட்டர் அகலத்தில் உள்ளது.
இந்த பாலத்தின் வழியே தினமும், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை மார்க்கத்தில் பாலத் தின் மேல் ஏறும் சாலை ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில்இருட்டான இந்த இடத்தில் வாகனங்கள் தடம் புரண்டால் பாலத்தில் இருந்து கீழே விழும்அபாயம் உள்ளது.
எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஒதப்பை மேம்பாலத்தில் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

