/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடையா, மதுக்கூடமா? முகம் சுளிக்கும் பயணியர்!
/
நிழற்குடையா, மதுக்கூடமா? முகம் சுளிக்கும் பயணியர்!
நிழற்குடையா, மதுக்கூடமா? முகம் சுளிக்கும் பயணியர்!
நிழற்குடையா, மதுக்கூடமா? முகம் சுளிக்கும் பயணியர்!
ADDED : ஜன 27, 2025 11:26 PM

ஆரணி, சோழவரம் ஒன்றியம், வடக்கநல்லுார் ஊராட்சிக்கு உட்படட்டது கொள்ளுமேடு கிராமம்.
அந்த கிராமத்தில், புதுவாயல் -- ஆரணி நெடுஞ்சாலையோரம், ஆரணி நோக்கிய திசையில், பேருந்து பயணியர் நிழற்குடை ஒன்று உள்ளது.
அந்த நிழற்குடை தற்போது, மது பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. நிழற்குடை முழுதும், மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து கிடக்கின்றன.
அந்த நிழற்குடையில் காத்திருப்பதை தவிர்த்த பயணியர், சாலையோரம் ஆபத்தாக பேருந்துக்காக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருக்கைகள் உடைந்து பாழடைந்த நிலையில் உள்ள அந்த நிழற்குடையை இடித்து, புதிய நிழற்குடை அமைக்க வேண்டும். மதுக்கூடமாக மாறாமல் இருக்க ஆரணி போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.