/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை
/
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை
ADDED : அக் 08, 2024 01:06 AM

ஆர்.கே. பேட்டை,ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் வெள்ளாத்துார் கூட்டு சாலையில் அமைந்துள்ளது வட்டாட்சியர் அலுவலகம். அதே வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
இது தவிர, தொழிற்பேட்டை, ஆர்.கே. பேட்டை காவல் நிலையம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்டவை இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.
இதனால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இந்த பகுதியில் உள்ளது.
முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் பேருந்து நிறுத்தம் குறுகலான பகுதியில் அமைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையை ஒட்டி, 20 முதல் 25 அடி அகலம் வரை சாலையோர பகுதி புதர் மண்டி கிடக்கிறது. இந்தப் பகுதியில் சர்வீஸ் சாலை ஏற்படுத்தினால், பகுதி வாசிகள் எளிதாக இங்குள்ள அலுவலகங்களுக்கு வந்து செல்ல முடியும். பேருந்துகளில் பயணிக்கவும் வசதி ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் புதர்களை அகற்றி சர்வீஸ் சாலை வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.