/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூன்று சாலை சந்திக்கும் ஆவடி 'சிக்னலில்' நெரிசலை குறைக்க 'ரவுண்டானா' அவசியம்
/
மூன்று சாலை சந்திக்கும் ஆவடி 'சிக்னலில்' நெரிசலை குறைக்க 'ரவுண்டானா' அவசியம்
மூன்று சாலை சந்திக்கும் ஆவடி 'சிக்னலில்' நெரிசலை குறைக்க 'ரவுண்டானா' அவசியம்
மூன்று சாலை சந்திக்கும் ஆவடி 'சிக்னலில்' நெரிசலை குறைக்க 'ரவுண்டானா' அவசியம்
ADDED : ஜன 17, 2025 09:59 PM
திருவள்ளூர்:மூன்று சாலைகள் சந்திக்கும் ஜே.என்.சாலை-ஆவடி சாலை சந்திப்பில் நெரிசலை தவிர்க்க 'ரவுண்டானா' அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் பெரியகுப்பம் ரயில் நிலையம் பகுதிகளில் இருந்து திருவள்ளூர் நகர், திருத்தணி, திருப்பதி செல்லும் வாகனங்கள், ஜே.என்.சாலை வழியாக பயணிக்கின்றன. ஜே.என்.சாலை-ஆவடி புறவழி சாலை சந்திப்பு பகுதி குறுகலாக இருந்ததால், ஆவடியில் இருந்து வரும் வாகனங்களும், ஜே.என்.சாலையில் இருந்து அச்சாலை வழியாக பிரியும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசால் சிக்கித் தவிக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் சாலை அகலப்படுத்தப்பட்டு, இடையூறாக இருந்த மின்மாற்றி மற்றும் கட்சி கொடி கம்பம் அகற்றப்பட்டது. தற்போது, ஆவடி சாலை சந்திப்பு பகுதி சாலை விசாலமாக உள்ள நிலையில், விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, ஜே.என்.சாலை-ஆவடி பைபாஸ் சாலை பிரியும் சந்திப்பில், வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதியை மதிக்காமல் செல்வதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. ஆட்டோ மற்றும் டூ- வீலர்களால், தாறுமாறாக செல்வதால், பிற வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து பாதிக்கிறது.
எனவே, ஆவடி பைபாஸ் சாலை பிரியும் இடத்தில், ஜே.என்.சாலை நடுவில் சிறிய அளவிலான 'ரவுண்டானா' அமைத்தால், வாகனங்கள் முறையாக செல்ல வசதியாக இருக்கும்; போக்குவரத்து நெரிசலும் குறையும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.