/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓராண்டாக சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாயால் அவஸ்தை
/
ஓராண்டாக சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாயால் அவஸ்தை
ஓராண்டாக சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாயால் அவஸ்தை
ஓராண்டாக சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாயால் அவஸ்தை
ADDED : மே 16, 2025 10:12 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் கிராமத்தில், ஓராண்டக்கு முன், பஜார் தெருவில் ஆகக்கிரமிப்பு அகற்றப்பட்டது. நீண்டகால இழுபறிக்கு பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அம்மையார்குப்பம் பேருந்து நிலையம் முதல், ஆந்திரா பேருந்து நிலையம் வரை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
இதில், பஜார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்தது. மேலும், ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளின் வாசல்படிகளும் இடிக்கப்பட்டன. சேதமடைந்த கழிவுநீர் கால்வாய், தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், தார்ச்சாலை சரிந்தும், கால்வாய் புதைந்தும் வருகிறது. இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள், தார்ச்சாலையா, கால்வாயா என தெரியாமல், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
கழிவுநீர் கால்வாயை தாண்டி வாடிக்கையாளர்கள் கடைக்கு வரமுடியாததால், விற்பனை பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தார்ச்சாலையும் சீரமைக்கப்படாததால், புழுதி பறக்கிறது. இதனால், குடியிருப்புவாசிகள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, கழிவுநீர் கால்வாய் மற்றும் தார்ச்சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.