/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி மாணவர்கள் நடுகல் குறித்து ஆய்வு
/
அரசு பள்ளி மாணவர்கள் நடுகல் குறித்து ஆய்வு
ADDED : மார் 02, 2024 10:08 PM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கள பயணம் மேற்கொண்டனர். சமூக அறிவியல் ஆசிரியர் அய்யப்பன், வழிகாட்டுதலுடன் நடந்த பயணத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ள நலம்புரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நடுகல் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன், கல்வெட்டு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து, கல் வெட்டு பிரதி எடுத்து, ஆவண படுத்துவதன் வாயிலாக 'டிஜிட்டல்' மயமாக கல்வெட்டு தகவல்களை பாதுகாக்க முடியும் என, தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் முன்னிலையில், நடுகல் பிரதி எடுத்து ஆவணமாக தயாரிக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணம் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, 150 மாணவர்கள் பங்கேற்றனர். உடன் அறிவியல் ஆசிரியர் ரமேஷ், கணக்கு ஆசிரியர் ஆனந்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

