/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் விரைவில் சார்பு நீதிமன்றம் தேர்வழி கிராமத்தில் கட்டடம் தேர்வு
/
கும்மிடியில் விரைவில் சார்பு நீதிமன்றம் தேர்வழி கிராமத்தில் கட்டடம் தேர்வு
கும்மிடியில் விரைவில் சார்பு நீதிமன்றம் தேர்வழி கிராமத்தில் கட்டடம் தேர்வு
கும்மிடியில் விரைவில் சார்பு நீதிமன்றம் தேர்வழி கிராமத்தில் கட்டடம் தேர்வு
ADDED : ஆக 03, 2025 11:01 PM
கும்மிடிப்பூண்டி:வழக்கறிஞர்களின் கோரிக்கையை அடுத்து, கும்மிடிப்பூண்டி, தேர்வழி கிராமத்தில் சார்பு நீதிமன்றம் செயல்பட வாடகை கட்டடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த கட்டடத்தில், சார்பு நீதிமன்றம் செயல்பட உள்ளது.
கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில், 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல், ஒருங்கிணைந்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
ஆனால் சார்பு நீதிமன்றம் இல்லாததால், பொன்னேரியில் உள்ள முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், கும்மிடிப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் திறக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் பலனாக, கும்மிடிப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் திறக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வேல்முருகன், சக்திவேல் ஆகியோர் தலைமையிலான நீதிபதிகள் குழு, சார்பு நீதிமன்றம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட வாடகை கட்டடங்களை பார்வையிட்டனர்.
ஆய்வின் முடிவில், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் இருந்து தேர்வழி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க ஒப்புதல் வழங்கினர்.
விரைவில் அந்த கட்டடத்தில் சார்பு நீதிமன்றம் செயல்படும் என, கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.