/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் கம்பத்தில் ஆபத்தானநிலையில் சுவிட்ச் பாக்ஸ்
/
மின் கம்பத்தில் ஆபத்தானநிலையில் சுவிட்ச் பாக்ஸ்
ADDED : அக் 16, 2024 12:19 AM

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 130க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு, பாதாள சாக்கடை பல பகுதியில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கன மழை பெய்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதியில் சாலைகள் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் மாறியுள்ளது.
இதனால் பகுதிவாசிகள் நடந்து செல்ல கூடிய முடியாத அளவு சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகி்னறனர்.
மேலும் 8 வது வார்டு பகுதியில் பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்றில் மின்கலப்பெட்டி திறந்த நிலையில் தண்ணீர் மூழ்கும் மோசமான நிலையில் உள்ளது.
இதனால் பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் மாவட்ட கலெக்டர் திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.