/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடைபயிற்சியில் ஈடுபட்ட வாலிபர் வெட்டி கொலை
/
நடைபயிற்சியில் ஈடுபட்ட வாலிபர் வெட்டி கொலை
ADDED : செப் 23, 2024 12:29 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம், மதுரை வீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 39. இவருக்கு, கடந்த 2009ம் ஆண்டு நடந்த விபத்தில், கால்களில் பாதிப்பு ஏற்பட்டு, பல ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்துள்ளார்.
சில மாதங்களாக, கால்களில் பாதிப்பு சரியாகி, தினமும் காலை புலிப்பாக்கத்தில் இருந்து மகாலட்சுமி நகர் வரை நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார்.
வழக்கம்போல, நேற்று காலை வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், அவர் மகாலட்சுமி நகரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தகவறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சரவணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் புலிப்பாக்கத்தைச் சேர்ந்த முத்து, 45, என்பவரை பிடித்து, வைத்து விசாரிக்கின்றனர்.