/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி சுருட்டல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய பெண்
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி சுருட்டல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய பெண்
ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி சுருட்டல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய பெண்
ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி சுருட்டல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய பெண்
ADDED : அக் 09, 2024 01:06 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலி அடுத்த கிருஷ்ணமராஜகுப்பம் கன்னிகாம்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிமணியம் மனைவி சரஸ்வதி, 40. இவர் தன் உறவினர் பிரகாஷ் உதவியுடன் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
ஒரு லட்சம் ரூபாய் முதல், 25 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டு நடத்தியுள்ளார். மேலும் திருத்தணி, திருப்பதி, திருவள்ளூர் மற்றும் ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்கி தருகிறேன் என தவணை முறையிலும் பணம் பெற்று வந்தார்.
இதை நம்பிய திருத்தணி, நொச்சிலி, கே.ஜி.கண்டிகை, சிறுகுமி, பீரகுப்பம், கோரமங்கலம், மாம்பாக்கம் உள்பட பல கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர். வீட்டுமனைகளுக்கு தவணை முறையில் பணம் கட்டியும் வந்தனர். இவர்களுக்கு போலி அக்ரிமெண்ட் பத்திரம் சரஸ்வதி எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் திருப்பி தராமல் இழுத்தடித்தார். வீட்டுமனைக்காக தவணை முறையில் பணம் செலுத்தியவர்களுக்கும் வீட்டுமனை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் 22ம் தேதி பாதிக்கப்பட்டவர்கள், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், 10 கோடி ரூபாய் வரை சரஸ்வதி ஏமாற்றியதாக புகார் அளித்தனர்.
தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்டோர் திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தனர். டி.எஸ்.பி., கந்தன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏலச்சீட்டு நடத்திய சரஸ்வதியிடம் விசாரணை நடத்தினார்.
சரஸ்வதி நேற்று காலை, 10:00 மணிக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குவதாக உறுதி கூறிவிட்டு, டி.எஸ்.பி.,யிடம் கடிதம் எழுதி கொடுத்து சென்றார்.
அதன்படி நேற்று காலை 10:00 மணிக்கு திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்கள், ஆண்கள் என 50க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
அப்போது சரஸ்வதி அங்கு வந்தார். பெண்கள் கூட்டத்தை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடி, மின்சார ரயில் மூலம் சென்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த, பெண்கள் சரஸ்வதியை கைது செய்து பணத்தை மீட்டு தரவேண்டும் என கோஷம் எழுப்பினர்.
டி.எஸ்.பி., பணத்தை மீட்டு தருவதாக உறுதி கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்.