/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடலில் மீன்பிடித்த இளைஞர் அலையில் சிக்கி உயிரிழப்பு
/
கடலில் மீன்பிடித்த இளைஞர் அலையில் சிக்கி உயிரிழப்பு
கடலில் மீன்பிடித்த இளைஞர் அலையில் சிக்கி உயிரிழப்பு
கடலில் மீன்பிடித்த இளைஞர் அலையில் சிக்கி உயிரிழப்பு
ADDED : ஜன 15, 2025 11:40 PM
மீஞ்சூர், மேற்குவங்க மாநிலம், முகுண்டப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யஜித்பெரா, 29. இவர், மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தில் உள்ள, தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில், தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் பொங்கல் விடுமுறை என்பதால், காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிக்கு சென்று, கடலில் துாண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி, கடலில் இழுத்து செல்லப்பட்டார். அருகில் இருந்த மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது, மூர்ச்சையாகி இருந்தார்.
தகவல் அறிந்த அங்கு வந்த, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவ குழுவினர் சோதித்துவிட்டு, சத்யஜித்பெரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதையடுத்து, காட்டூர் போலீசார் சத்யஜித்பெராவின் உடலை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.