/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாகனம் மோதி விபத்து; வாலிபர் பரிதாப பலி
/
வாகனம் மோதி விபத்து; வாலிபர் பரிதாப பலி
ADDED : செப் 21, 2025 11:02 PM
மீஞ்சூர்:பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 27; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் பகுதியில் பணி முடித்துவிட்டு, 'யமஹா' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மீஞ்சூர் - பொன்னேரி மாநில நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த வாகனம் ஒன்று, ஆகாஷின் பைக் மீது மோதியது. இதில், ஆகாஷ் அதே வாகனத்தில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
த கவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், உடலை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வரு கின்றனர்.