/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெள்ளாத்துாரம்மன் கோவிலில் ஆடி திருவிழா
/
வெள்ளாத்துாரம்மன் கோவிலில் ஆடி திருவிழா
ADDED : ஆக 11, 2025 11:07 PM

ஆர்.கே.பேட்டை, வெள்ளாத்துாரம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.
ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்துாரம்மன் கோவில்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம், சித்துார் திருப்பதி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், வெள்ளாத்துாரம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தி கோவிலில் காளத்தீஸ்வரருடன் அருள்பாலிக்கும் ஞானபிரசுன்னாம்பிகை தாயார், வெள்ளாத்துார் குலத்தில் பிறந்தவர்.
இதையொட்டி சிவராத்திரியின் போது காளஹஸ்தியில் வெள்ளாத்துாரம்மன் சார்பில் தாய் வீட்டு சீர்வரிசை வழங்கப்படுகிறது.
கோவிலில் நேற்று ஆடி பொங்கல் திருவிழா நடந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள், அம்மனுக்கு பால்குட ஊர்வலமாக வந்துஅபிேஷகம் செய்தனர். கோவில் வளாகத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.