/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா பொதட்டூரில் மரக்கன்று நடவு
/
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா பொதட்டூரில் மரக்கன்று நடவு
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா பொதட்டூரில் மரக்கன்று நடவு
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா பொதட்டூரில் மரக்கன்று நடவு
ADDED : அக் 15, 2024 07:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நேற்று பொதட்டூர்பேட்டையில் கொண்டாடப்பட்டது. பொதட்டூர்பேட்டையில் கலாம் மாணவர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் காந்தி பூங்கா எதிரே, அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகுதிவாசிகள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அதை தொடர்ந்து, நகரின் வடகிழக்கில் உள்ள கருப்பு மலை அடிவாரத்தில் குளக்கரையில், பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. கலாம் மாணவர் இயக்கத்தினர் தொடர்ந்து மரக்கன்று நடவு மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.