/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடுத்தடுத்து விபத்து: ரயில் மோதி இருவர் பலி
/
அடுத்தடுத்து விபத்து: ரயில் மோதி இருவர் பலி
ADDED : பிப் 13, 2024 06:33 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே பாட்டைகுப்பம் கிராமத்தில் வசித்தவர் பாஸ்கர், 36, மீனவர். நேற்று முன்தினம் இரவு, ஆரம்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தார். சூளூர்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கவரைப்பேட்டை அடுத்த திருப்பேர் கிராமத்தில் வசித்தவர் கோவிந்தராஜ், 70. நேற்று, கவரைப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தார்.
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.