/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்து அச்சம்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்து அச்சம்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்து அச்சம்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்து அச்சம்
ADDED : அக் 06, 2025 02:05 AM

திருவாலங்காடு,:தேசிய நெடுஞ்சாலையில் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக, திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண் எடுத்து வரப்படுகிறது. தற்போது, திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பகுதியில் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் மலைபோல் குவித்து செல்கின்றன.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சவுடு மண் சிதறி கொண்டே செல்வதால், துாசி மற்றும் சிதறும் துகள்களால், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கிறது.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் எச்சரித்தும், சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வது தொடர்ந்து வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.