/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் திரியும் மாடுகளால் ஊத்துக்கோட்டையில் விபத்து அபாயம்
/
சாலையில் திரியும் மாடுகளால் ஊத்துக்கோட்டையில் விபத்து அபாயம்
சாலையில் திரியும் மாடுகளால் ஊத்துக்கோட்டையில் விபத்து அபாயம்
சாலையில் திரியும் மாடுகளால் ஊத்துக்கோட்டையில் விபத்து அபாயம்
ADDED : பிப் 16, 2025 03:24 AM

ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், புத்துார், திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பகுதியில் இவ்வூர் உள்ளதால், போக்குவரத்து நிறைந்து காணப்படும். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில்களில் கால்நடை வளர்ப்பும் ஒன்று.
இங்கு கால்நடை வளர்ப்பவர்கள், அவற்றை வீடுகளில் கட்டி வளர்க்காமல் சாலையில் திரிய விடுகின்றனர். இவை தீனிக்காக பஜார் பகுதியில், பூ, காய்கறி, பழக்கடைகளுக்கு செல்கின்றன. அவை தறிகெட்டு ஓடும்போது, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது மோதி காயம் ஏற்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்கப்படும் எனவும், அதன் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முன்னாள் கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.
ஆனாலும் எவ்வித பலனும் இல்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.