/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகற்றப்படாத கொடி கம்பங்களின் இடிபாடுகளால் விபத்து அபாயம்
/
அகற்றப்படாத கொடி கம்பங்களின் இடிபாடுகளால் விபத்து அபாயம்
அகற்றப்படாத கொடி கம்பங்களின் இடிபாடுகளால் விபத்து அபாயம்
அகற்றப்படாத கொடி கம்பங்களின் இடிபாடுகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 08, 2025 02:21 AM

பள்ளிப்பட்டு:அரசு அனுமதியின்றி பொது இடங்களில் நடப்பட்டிருந்த அரசியல் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கொடி கம்பங்கள் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டன.
பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் கூட்டுச்சாலையில், தி.மு.க.,வின் கட்சி கொடி கம்பம் கல்வெட்டுடன் நடப்பட்டிருந்தது.
சமீபத்தில், வருவாய் துறை சார்பில் இந்த கொடிகம்பம் அகற்றப்பட்டது. இதில், கொடிகம்பத்தின் கல்வெட்டு மற்றும் அடிப்பீடம் உள்ளிட்டவை சிதைந்தன. ஆனால், முழுமையாக அங்கிருந்து அகற்றப்படாமல் தொடர்ந்து அங்கேயே சாலையில் சிதறிக் கிடக்கின்றன.
இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை திருப்பத்தில் கட்டட கழிவுகள் சிதறி கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். கொடி கம்பத்தின் இடிபாடுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.