/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : மார் 17, 2025 01:30 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான சாலையோரம் ஏராளமான உணவகங்கள் உள்ளன. இங்கு வரும் வாகன ஓட்டிகள், வாகனங்களை இணைப்பு சாலையோரம் நிறுத்திவிட்டு சாப்பிட செல்கின்றனர்.
ஆனால், பெருவாயல், வேர்க்காடு, கும்மிடிப்பூண்டி பைபாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு வரும் பெரும்பாலான கனரக வாகன ஓட்டிகள், இணைப்பு சாலையை தவிர்க்கின்றனர். மாறாக, தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான முறையில் வாகனங்களை நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், அதே திசையில் பின்னால் வேகமாக வரும் பிற வாகனங்கள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்களால் கண்டு திக்குமுக்காடி போகின்றன. சில சமயம், வாகனங்கள் மீது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், இப்பகுதிகளில் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, ஆபத்தான முறையில் நிறுத்தப்படும் வாகனங்களை, இணைப்பு சாலையில் நிறுத்த வலியுறுத்த வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.