/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேகத்தடைஇருப்பது தெரியாமல் தொடரும் விபத்துகள்
/
வேகத்தடைஇருப்பது தெரியாமல் தொடரும் விபத்துகள்
ADDED : நவ 11, 2024 03:06 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே. பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் நுழைவாயில் எதிரே சமீபத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
இந்த வேகத்தடை அமைந்துள்ள பகுதியில் இருபுறமும் புளிய மரங்கள் வளர்ந்துள்ளதால் நிழல் சூழ்ந்த பகுதியாக உள்ளது.
இதனால் பகல் நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடையை கவனிக்க முடிவதில்லை. வேகமாக வேகத்தடையை கடக்கும் வாகனங்கள், நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றன. வேகத்தடையை வாகன ஓட்டிகளின் கண்ணுக்குப் புலப்படும் பகுதியில் அமைக்க வேண்டும் என பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.