/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குவியும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் குடியிருப்பில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்

ADDED : செப் 29, 2025 01:12 AM

சோழவரம்:ஜனப்பசத்திரத்தில், குடியிருப்பு பகுதிகளில், ரசாயனம் மற்றும் மருத்துவ கழிவுகள் தனிநபர்களால் குவித்து வைக்கப்படுவதால், கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், குடியிருப்பு பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
சோழவரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜனப்பசத்திரம் சாய்கிருபா நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதியானது, கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக, வெளியிடங்களில் இருந்து மருத்துவம் மற்றும் ரசாயன கழிவுகள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து கொண்டு வரப்பட்டு ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகள் அருகில் குவிக்கப்படுகின்றன.
இவற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அவர்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.
இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:
இந்த கழிவுகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என தெரியவில்லை.
தனிநபர்கள் சிலர் இவற்றை லாரிகளில் இங்கு கொண்டு வந்து குவித்து வைக்கின்றனர். சோழவரம் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.