ADDED : ஜன 02, 2026 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: ''திருவள்ளூர் மாவட்ட சாலைகளில், வனத்துறையுடன் ஊரக வளர்ச்சி துறை இணைந்து, மரக்கன்றுகள் நட்டு, பசுமை சாலைகளாக மாற்றப்படும் என,'' கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில், பூண்டி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரதாப் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வனத்துறை மூலமாக, மரக்கன்றுகளை சாலையின் இருபுறங்களிலும் அமைத்து, மாவட்டத்தை பசுமையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

