/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் கூடுதலாக ஓட்டு சாவடிகள்...அதிகரிப்பு!:1,500 வாக்காளருக்கு மேல் இரண்டாக பிரிப்பு
/
திருவள்ளூரில் கூடுதலாக ஓட்டு சாவடிகள்...அதிகரிப்பு!:1,500 வாக்காளருக்கு மேல் இரண்டாக பிரிப்பு
திருவள்ளூரில் கூடுதலாக ஓட்டு சாவடிகள்...அதிகரிப்பு!:1,500 வாக்காளருக்கு மேல் இரண்டாக பிரிப்பு
திருவள்ளூரில் கூடுதலாக ஓட்டு சாவடிகள்...அதிகரிப்பு!:1,500 வாக்காளருக்கு மேல் இரண்டாக பிரிப்பு
UPDATED : மார் 17, 2024 01:22 AM
ADDED : மார் 17, 2024 01:18 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள இடங்களில், ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 10 சட்டசபை தொகுதிகளிலும், கூடுதலாக, 22 துணை ஓட்டுச் சாவடிகள் அதிகரித்து தற்போது 3,687 ஓட்டு சாவடிகள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில், 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மாவட்டம் முழுதும், 290 பள்ளிகளில், 3 ஆயிரத்து 665 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச் சாவடிகளைப் பிரித்து, துணை ஓட்டுச் சாவடிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளிலும், கூடுதலாக, 22 துணை ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
துணை ஓட்டுச் சாவடி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும், கூடுதலாக 22 துணை ஓட்டுச் சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், 88 ஓட்டுச் சாவடி இடங்கள், வாக்காளர் வசதிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 26 ஓட்டுச் சாவடி கட்டடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 'செல்பி பாயிண்ட்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் பிரபுசங்கர் திறந்து வைத்து, புகைப்படும் எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்தல், சத்தியபிரசாத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

