/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துணை சுகாதார நிலைய செவிலியர்களுக்கு 'அட்வைஸ்'
/
துணை சுகாதார நிலைய செவிலியர்களுக்கு 'அட்வைஸ்'
ADDED : செப் 18, 2025 11:30 PM
திருத்தணி:நகராட்சி, ஊராட்சிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் தினமும் திறக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என வட்டார மருத்துவ அலுவலர் செவிலியர்களை எச்சரித்தார்.
திருத்தணி நகராட்சியில், நான்கு துணை சுகாதார நிலையம், ஒன்றியத்தில், 18 துணை சுகாதார நிலையம் என மொத்தம், 22 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. துணை சுகாதார நிலையங்கள் சரியாக திறக்கப்படுவதில்லை, நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் காலதாமதம் என புகார் வந்தது.
இதையடுத்து நேற்று பீரகுப்பம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி தலைமையில் துணை சுகாதார நிலைய செவிலியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட சுகாதார கல்வியாளர் கணேசன் பங்கேற்று, கிராம செவிலியர்கள் பணிகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து வட்டார ம ருத்துவ அலுவலர் கலைவாணி பேசியதாவது:
துணை சுகாதார நிலையங்கள் தினமும் திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை, முதலுதவி சிகிச்சை வழங்க வேண்டும். அதே நேரத்தில், கிராமங்களுக்கு சென்று சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும். பணியில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.