/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி வாயிலாக வழங்கும் குடிநீரில் குளோரினேஷன் செய்ய அறிவுரை
/
லாரி வாயிலாக வழங்கும் குடிநீரில் குளோரினேஷன் செய்ய அறிவுரை
லாரி வாயிலாக வழங்கும் குடிநீரில் குளோரினேஷன் செய்ய அறிவுரை
லாரி வாயிலாக வழங்கும் குடிநீரில் குளோரினேஷன் செய்ய அறிவுரை
ADDED : டிச 14, 2024 02:09 AM

திருமழிசை:பூந்தமல்லி சுகாதார வட்டம் சார்பில், திருமழிசை உட்பட பல பகுதிகளில் நேற்று, லாரிகள் வாயிலாக வழங்கப்படும் குடிநீரின், தரம் குறித்த பரிசோதனை முகாம் நடந்தது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில், மாவட்ட சுகாதார அலுவலர் ஜே.பிரபாகரன் உத்தரவின்படி, வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா தலைமையில் மூத்த சுகாதார ஆய்வாளர் எட்வர்ட் ராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் குடிநீர் கொண்டு செல்லும் லாரிகளை நிறுத்தி குடிநீரில் குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளதா என, பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும், ஒட்டுனர்களிடம் லாரிகளில் கொண்டு சென்று விநியோகிக்கப்படும் குடிநீரை குளோரினேஷன் செய்யப்பட்டு வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், ராஜபாண்டியன், சோமசுந்தரம், கஜேந்திரன், மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்ட சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் உடனிருந்தனர்.