/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் வறுத்தெடுக்கம் வெயில் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

ADDED : ஏப் 26, 2025 09:37 PM
திருத்தணி:திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. மே மாதம் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்க உள்ள நிலையில், கடந்த பத்து நாட்களாக திருத்தணியில், தொடர்ந்து, 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர். மேலும் அனல் காற்று வீசுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நிம்மதியாக துாங்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர்.
திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரவி கூறியதாவது:
தற்போது கோடை வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், பழச்சாறு பருகவேண்டும். எலுமிச்சை பழச்சாறு அதிகளவில் பருகினால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி தருவதுடன், உடலின் வெப்பத்தையும் குறைக்கும்.
இன்னும் ஒன்றரை மாதத்திற்கு மதியம், 12:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று மருந்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.