/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 22, 2024 07:28 AM

பொன்னேரி : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பொன்னேரி, மீஞ்சூர்,சோழவரம் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாய விலைக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
அங்கு பணிபுரியும் பணியாளர்கள் நேற்று, பொன்னேரி காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி முன், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
நியாய விலைக்கடைகளில் அதிகாரிகளின் ஆய்வின்போது பணியாளர்கள் தன்னை அறியாமல்செய்யும் சிறு தவறுகளுக்கு, விதிக்கப்படும் அபராத தொகையை இரு மடங்காக உயர்த்தி பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
மஞ்சள், டீத்துாள், சோப்பு, மிளகாய் என கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய விற்பனையாளர்களுக்கு நிர்ப்பந்தம் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும்.
பணியாளர்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து, 10கி.,மீ., தொலைவிற்குள் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.