/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கீரை விதையை பரிசோதித்து பயிரிட வேளாண் அலுவலர்கள் அறிவுரை
/
கீரை விதையை பரிசோதித்து பயிரிட வேளாண் அலுவலர்கள் அறிவுரை
கீரை விதையை பரிசோதித்து பயிரிட வேளாண் அலுவலர்கள் அறிவுரை
கீரை விதையை பரிசோதித்து பயிரிட வேளாண் அலுவலர்கள் அறிவுரை
ADDED : நவ 15, 2025 10:06 PM
திருவள்ளூர்: கீரை விதையை பரிசோதனை செய்து பயிரிட வேண்டும் என, வேளாண் துறை அலுவலர், விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கீரை வகை உணவுகளில் கால்சியம், இரும்பு, நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின், புரதம், போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன.
வைட்டமின் - ஏ, கீரைகளில் அதிகமாக இருப்பதால், கண் சம்பந்தமான வியாதிகளை கட்டுப்படுத்தலாம்.
அதிகமாக மழை பெய்யும் காலத்தை தவிர்த்து, எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். தேர்வு செய்த நிலத்தில், ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம், 4 டன் எருவை கலந்து பரவலாக கொட்டி, கட்டியில்லாத அளவுக்கு மண்ணை உழவு செய்ய வேண்டும்.
அதன்பின், தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும். கீரை விதைகளோடு, மணல் கலந்து பாத்திகளில் துாவி விட வேண்டும்.
கீரைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி, பூண்டு கரைசலை தெளிக்க வேண்டும். இதனால், பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.
அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை ஆகிய மூன்றும், 22 - 30 நாட்களுக்குள் அறுவடைக்குதயாராகும். பாலக்கீரை 45 நாட்களில் அறுவடைக்கு வரும். கீரைகளை விதைப்பதற்கு முன், விதை பரிசோதனை செய்வது அவசியம்.
எனவே, விதையின் தரத்தை உறுதி செய்வதற்கு, திருவள்ளூர் பெரியகுப்பத்தில் இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தில், விதையின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

