/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் பம்ப் ஆப்பரேட்டர்கள் அலட்சியம்
/
ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் பம்ப் ஆப்பரேட்டர்கள் அலட்சியம்
ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் பம்ப் ஆப்பரேட்டர்கள் அலட்சியம்
ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் பம்ப் ஆப்பரேட்டர்கள் அலட்சியம்
ADDED : நவ 15, 2025 10:07 PM
திருத்தணி: ஊராட்சிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாமல், பம்ப் ஆப்பரேட்டர்கள் அலட்சியம் காட்டுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீர் வசதி இருந்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு, மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி, தெருக்களில் வினியோகம் செய்யும் பம்ப் ஆப்பரேட்டர்கள், சரியான முறையில் வேலை செய்வதில்லை.
இதனால், திருத்தணி அடுத்த சூர்யநகரம், செருக்கனுார், அகூர், முருக்கம்பட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், குடிநீர், தெரு மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியாக செய்து தர வேண்டும் என, பம்ப் ஆப்பரேட்டர்கள், ஊராட்சி செயலர்களுக்கு, மாவட்ட திட்ட இயக்குநர்களுடன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை, ஊராட்சி பம்ப் ஆப்பரேட்டர்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஊராட்சிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

