/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தல்
/
திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தல்
திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தல்
திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தல்
ADDED : பிப் 22, 2024 12:59 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விளைநிலங்களில் உயர் விளைச்சல் ரகங்களுக்கு தொடர்ந்து ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்பட்டு, வருகிறது.
விவசாயிகள் தங்கள் நிலங்களின் மண்வளத்தை பாதுகாக்கவும், கூடுதல் மகசூல் பெறவும், திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் வட்டாரத்தில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையம் கடந்த 2018 முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது.
இம்மையத்தில் இந்த ஆண்டு 55,000 லிட்டர் திரவ உரங்கள் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகிறது.
நெல் மற்றும் பயறு, நிலக்கடலை பயிர்களுக்கு தேவையான, அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்ட ஏழு வகையான திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு, திருவள்ளுர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் திரவு உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. 500 மி.லி. அளவுள்ள திரவ உயிர் உர கொள்கலன் ஒன்றின் விலை 150 ரூபாய். மானிய விலையிலும் இந்த வகை உரங்கள் கிடைக்கும்.
எனவே திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நடப்பு நவரை பருவத்தில் ரசாயன உரங்களை குறைத்து, திட மற்றும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளம் காத்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.