/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
/
மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
ADDED : ஜூலை 31, 2025 12:35 AM
திருத்தணி:விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
தேவைப்படும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என, உதவி இயக்குநர் அறிவுறுத்துள்ளார்.
திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இதில் நெல், வேர்க்கடலை, கரும்பு, சிறுதானியங்கள் மற்றும் காய்கறி போன்ற பயிர்கள் அதிகளவில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந்நிலையில் வேளாண் துறையினர் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் கீழ், தக்கைப்பூண்டு விதைகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து திருத்தணி வேளாண் துறை பொறுப்பு உதவி இயக்குநர் பிரேம் கூறியதாவது:
பயிரிடுவதற்கு முன், நிலத்திற்கு சத்து அதிகளவில் தரும் தக்கைப்பூண்டு விதைகள் தற்போது மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ விதைகள் வழங்கப்படுகின்றன.
ஒரு கிலோ தக்கைப்பூண்டு விதை, மொத்த விலை, 129 ரூபாய். இதில் விவசாயிகளுக்கு 62.50 ரூபாய் மானியமாக வழங்கப்படுவதால், ஒரு கிலோ, 67 ரூபாய்க்கு விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு, சிட்டா நகல் கொண்டு வந்து மானிய விலையில் விதைகள் பெற்றுக் கொள்ளலாம்.
அதே போல், விவசாயிகள் அரசின் நலதிட்ட உதவிகள் பெறுவதற்கு தங்களது, நில உடைமைகளை ஆன்லைனில் பதிவு செய்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.